Wednesday 29 July 2020

சென்னைக்கு வந்தோம்-1

சென்னைக்கு வந்தோம்-1

சென்னைக்கு வந்தோம்-1

நான் சென்னைக்கு வந்தவனல்ல. வரவழைக்கப்பட்டவன் .பின்னணி என் தந்தையும் தாயும்
என் தாயார் அமிர்த சிகாமணிக்கு தீபம் ஏற்றுவது பிடிக்கும்.மிகவும் ஈடுபாட்டோடு விளக்கேற்றுவார் ஏற்கனவே எரியும் தீபங்களில் எண்ணை ஊற்றுவதில் ஒரு தனிப்பிரியம்.கோயில்களுக்கு ஒரு சிறிய பாட்டிலில் எண்ணை ஊற்றிக் கொண்டுபோவார்.பாட்டிலின் மூடியைத்திறந்து கவனமாக அருகில் ஓர் இடம் கண்டுபிடித்து அங்கே வைத்துவிட்டு உதடுகள் குவிய  கண்கள் கூர்மையாகி ஒரு துளி கூடக் கீழே சிந்திவிடாதபடி தீபக்குழிவில் எண்ணை ஊற்றியானதும் பாட்டில் மூடி வைத்த இடத்திலிருந்து அதை எடுத்து மூடிவிட்டு கையோடு கொண்டுவந்த சிறிய கைத்துண்டில் கைதுடைத்துவிட்டு முதலில் தீபத்தின் துளிர்க்கும் சுடரைக்  கை கூப்பிக்கும்பிடுவார்.
இதைச்சென்னைக்கு வந்தபுதிதில் நாங்கள் குடியிருந்த வாடகை வீட்டிற்கு அருகில் இருந்த கந்தசாமி கோயில் அவர் என்னை அழைத்துச் செல்லும்போது கவனித்திருக்கிறேன்.         ஒருமுறை சென்னைக்கு வந்து,பின் மூன்றாண்டுகள் கழித்து குற்ற உணர்வு காரணமாக சென்னைக்கு ஓடிவந்தவன். அந்த இடைவெளி ஆறு மாதங்கள்.அதன்பின் மீண்டும் சென்னைக்கு வந்ததற்கு நான் பொறுப்பல்ல.உயர்படிப்புக்குத் தகுதியாகி, பெற்றோருடன் இருக்க விரும்பிய என் மகளும் மகனும் தனி இருவராகப் பள்ளிகொண்டாவில் இருந்த எங்களைச் சென்னைக்கு வரச்செய்தனர்.